டி20 போட்டியில் சூப்பர் ஓவருக்கான புதிய விதிமுறைகளை வகுத்தது ஐசிசி..!

0

டி20 கிரிக்கெட் போட்டிகள் ‘டை’யில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெறும் அணியே அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். இந்த முறையில் இதுவரை நடைபெற்ற பல சர்வதேச போட்டிகளில் திரில்லிங் ஆன முடிவுகள் நடந்து உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த சூப்பர் ஓவர் நடைமுறைகள் தொடர்பான புதிய விதிமுறைகளை வகுத்து வெளியிட்டு உள்ளது ஐசிசி.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

உலகக்கோப்பை தருணம்..!

நியூஸிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை பைனல் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவினால் பல சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் சூப்பர் ஓவருக்கான புதிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா டி20 தொடரில் பின்பற்றப்பட உள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜோப்ரா ஆர்ச்சர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு..!

புதிய விதிகள்:

  1. போட்டி சமனில் முடிந்தால் விளையாடப்படும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் இனி முடிவு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக சூப்பர் ஓவர் விளையாடப்படும்.
  2. சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்.
  3. ஒவ்வொரு அணிக்கும் சூப்பர் ஓவரில் தலா ஒரு ரிவியூ வழங்கப்படும்.
  4. அந்த போட்டியில் 2வது ஆக பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்யும்.
  5. மழை போன்ற காரணங்களால் சூப்பர் ஓவர் தடைபட்டால் போட்டி கைவிடப்படும்.
  6. அப்போட்டியில் முதலாவதாக பந்து வீசிய அணி சூப்பர் ஓவருக்கான பந்தினை தேர்வு செய்யலாம். 2வது ஆக பந்து வீசும் அணி அதே பந்தை தேர்வு செய்ய வேண்டும். பந்தை மாற்ற விரும்பினால் போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  7. பீல்டர்கள் போட்டியின் கடைசி ஓவரில் எந்த கட்டுப்பாட்டில் இருந்தனரோ சூப்பர் ஓவரிலும் அதே முறையில் இருக்க வேண்டும். சூப்பர் ஓவருக்கான இடைவேளை 5 நிமிடங்கள்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here