ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு புகார்..! அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்..!

0
Teachers Exam
Teachers Exam

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதாக தற்போது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முறைகேடு முதல்வரின் மாவட்டத்தில் நடந்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஆசிரியர் தகுதித் தேர்வு..!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக ஆதாரங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

தமிழகத்தில் 2012 ம் ஆண்டு முதல் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு முறை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் 2013, 2014, 2017, 2019 ஆகிய வருடங்களிலும் தேர்வு நடைபெற்றது. ஆனால் 2012, 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித் தேர்வுகளின் முடிவுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 2014ம் ஆண்டு தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1 லட்சம் ஆசிரியர்கள் பணிக்காக இன்றுவரை காத்திருக்கின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு..!

2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தான் அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும் மேலும் கொங்கு மண்டலத்தில் தான் அதிகளவில் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும் ஏற்கனவே 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

2012ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் கணிதப் பாடத்தில் ஒருவர் மட்டும் 90 நிமிடங்களில் எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்ததும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ஆனால் அந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் குற்றம் சாட்டினார்.

முதல்வர் மாவட்டத்தில் முறைகேடு..!

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

தேர்வர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த புகாருக்கு ஆதாரங்கள் திரட்டி உள்ளனர். அதில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 20 மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி ஆகி உள்ளனர். ஆனால் சேலம் மாவட்டத்தில் ’13 DE 31′ மற்றும் ’13 DE 30′ ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

எனவே இது குறித்து விரைந்து விசாரணை நடத்தி முறைகேடுகளை களையுமாறு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here