வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் – யார் எந்த நாளில் எடுக்கலாம்..?

0

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தால் வங்கிகள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் முழு நேரம் செய்லபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வங்கிகளில் பணம் எடுக்க வருபவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கூட்டம் அலைமோதும்:

இன்று முதல் வங்கிகள் முழுநேரம் செயல்படும் (காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை) என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?

இந்த விதிமுறைகள் மே 11 வரை அமலில் இருக்கும் என்றும் அதன் பின்னர் வழக்கம் போல யார் வேண்டுமானாலும் எந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் வசூலித்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here