தனியார் துறை ஊழியரா நீங்க?? அடுத்த ஆண்டு உங்க சம்பளம் குறையப் போகுது!!

0

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஊதிய விதி அமலுக்கு வர இருப்பதால் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் அனைவரின் சம்பளமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியால் நாட்டில் உள்ள நிறுவனங்களில் புதிய ஊதிய கட்டமைப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய விதி:

கடந்த ஆண்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய ஊதிய விதியினை நிறைவேற்றியது. இந்த விதி மூலமாக தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்மை மற்றும் பின்னடைவும் ஏற்பட உள்ளது. இந்த விதி மூலமாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மொத்தமாகவே 50 சதவீத ராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதன் மூலமாக தற்போது ஊழியர்கள் வாங்கும் சம்பளம் குறைய உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

salary
salary

இந்த விதி வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி காரணமாக நாட்டில் ஊதிய கட்டமைப்பில் மிக பெரிய மாற்றம் இருக்கும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊதிய பட்டியலையும் மாற்றிமைக்க உள்ளனர். இந்த விதி மூலமாக சில நன்மைகளும் உள்ளன.

மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் – டிக்டாக் ரவுடி பேபி சூர்யா அதிரடி கைது!!

இந்த புதிய விதி ஊழியர்களின் கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்க வழிவகை செய்யும். ஊழியரின் கிராச்சுட்டியின் அளவு ஒருவரின் அடிப்படை சம்பளத்தை கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விதியின் மூலமாக அடிப்படை சம்பளம் அதிகரித்து, கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும். சம்பள பணம் குறைத்தாலும், நீண்ட காலா சேமிப்பு தொகையினை அதிகரிக்க வழிவகை செய்யும். இந்த விதியின் மூலமாக ஊழியர்களுக்கு சில பின்னடைவுகளும், சில நன்மைகளும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here