கொரோனா பேரிடரிலும் உயர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை – ஆச்சரியமளிக்கும் புள்ளிவிபரம்!!

0

கொரோனா நோய்த்தொற்று காலத்திலும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் புதிதாக 412 பேர் இணைந்துள்ளனர். அதில் 55 பேர் இந்தியர்கள் என சமீபத்தில் வெளியான ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை

கடந்த 2020ம் ஆண்டு உலக நாடுகள் பல கொரோனா நோய்த்தொற்று பரவலால் முடங்கி இருந்தது. கொரோனா நோய் தொற்றை தடுக்க முடியாமல், வல்லரசு நாடுகள் கூட திணறியது குறிப்பிடத்தக்கது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலக பொருளாதாரம் கடந்த ஆண்டு கடும் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. பொதுமுடக்க அமர்வினால் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து என அனைத்து பொது பயன்பாடுகளும் முடக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொருளாதார வீழ்ச்சியினால் வல்லரசு நாடுகளே தத்தளித்துப்போன நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிட்டது. வேலையின்மை மற்றும் உணவுத்தட்டுப்பாடும் அதிகரித்து வந்தது. ஒரு பக்கம் இவ்வாறு இருக்க, உலக நாடுகளில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஹூரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021 என்ற பத்திரிகை உலக பணக்கார்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்கள் ஊடகங்களில் வெளியீடு – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

கொரோனா தொற்று மத்தியில் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 412 பேர் இணைந்துள்ளனர். அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, ஒவ்வொரு வாரமும் 8 பேர் வீதம் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 55 பேர் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். வாரத்திற்கு ஒருவர் வீதம் இந்தியர்கள், பணக்காரர்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 40 பேர் தற்போது இந்தியாவில் வசித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 209 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here