குட்டி “தல” ஆத்விக் பிறந்தநாள் – இணையத்தை தெறிக்க விட்ட “தல” ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்குக்கு இன்று பிறந்தநாள் என்ற காரணத்தால் “தல” ரசிகர்கள் இன்று சமூகவலைத்தளங்களில் ஆத்விக்குக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அசத்தி வருகின்றனர். போஸ்டர்கள் ஒட்டியும் தங்களது அன்பினை தெரிவித்து வருகின்றனர்.

“தல” அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தான், நடிகர் அஜித். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறையில் அறிமுகமாகி தனது நடிப்பின் காரணமாக அனைவரையும் ஈர்த்தவர். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பின் காரணமாக மக்களை ஈர்த்தார் என்று ஒரு பக்கம் கூறினாலும் மற்றொரு பக்கம் அவரது எளிமையான நடத்தை மக்கள் மத்தியில் அவரை பன்மடங்கு மதிப்பு மிக்கவராக மாற்றியுள்ளது.

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்கள் ஊடகங்களில் வெளியீடு – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

Ajith's son Aadvik Ajith's cute pictures go viral | Tamil Movie News - Times of India

இப்படியாக இருக்க, இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆத்விக் மற்றும் அனோஷ்கா என்று இரு குழந்தைகள் உள்ளனர். “தல” ரசிகர்கள் எப்போதுமே நடிகர் அஜித்தின் மீது வெறித்தனமான அன்பினை வைத்திருப்பர். அந்த வகையில் அவரது மகனிற்கு இன்று பிறந்தநாள். அவரது மகன் ஆத்விக் இன்று தனது 6 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இன்று இது குறித்த கேஷ்டேகை அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இன்று இணையத்தளத்தில் இது குறித்த மீம்களை தான் அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி சில ரசிகர்கள் பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here