இலவச பேருந்து பயணம்.. அரசு கொண்டு வந்த புதிய சிறப்பம்சம் – பெண்கள் மகிழ்ச்சி!!

0

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் பிங்க் நிறத்தில் அப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிங்க் பேருந்து:

கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்திய முதல் ஐந்து திட்டங்களில் ஒன்று அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம். இதனால் தமிழகத்தில் ஏராளாமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.குறிப்பாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40% லிருந்து 60% ஆக உயர்ந்தது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு புதிதாக ஒரு வசதியினை சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது,பெண்களுக்கான இலவச பேருந்து குறிப்பிட்ட சாதாரண பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை அறியாமல் பெண்கள் சொகுசு பேருந்துகளில் பயணித்து ஏமாற்றம் அடைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்தின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றி அடுத்த வாரம் முதல் பிங்க் நிற பேருந்தை செயற்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக குறிப்பட்ட சில வழித்தடங்களில் மட்டும் இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here