தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிய அதிகாரிகள் நியமனம் – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

0

தமிழகத்தில் தேர்தல் வரும் சூழலில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக புதிய அதிகாரிகள் தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோன பரவல் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சில தினங்களாக கொரோனா வைரசுக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கூட அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை மறந்து வருகின்றனர். இதனாலே கொரோனா அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்னும் 19 நாட்களில் சட்டமன்ற தேர்தல் என்பதால், இந்த நேரத்தில் கொரோனா அதிகரிப்பது சற்று சிக்கலான ஒன்று. தற்போது இந்த தேர்தலை கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் நடத்த புதிய அதிகாரிகள் தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரச்சாரத்திற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே போனேன் – கமல் ஓபன் டாக்!!

அதன்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த கதிர்குமார் மற்றும் ரோகினி தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிஹார் மாநிலத்தில் கொரோனாவிற்கு மத்தியில் தேர்தல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து அந்த மாநில அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தற்போதைய நிலைக்கு இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here