தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் கு பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வர உள்ளது. இதனால் தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வு குறித்து பல்வேறு அறிவிப்புகளையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது TNPSC தேர்வர்களுக்கு உதவும் வகையில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இணைய வழியில் ஒளிபரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த பயிற்சி வகுப்புகள் AIM TN என்ற இணையதள பக்கத்திலும், youtube சேனலிலும் விரைவில் ஒளிபரப்ப உள்ளதால் தேர்வர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.