இந்திய அரசானது, சாலை போக்குவரத்தை எளிமையாக்கும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற வகையில், தனியார் மற்றும் வாடகை வாகனங்களுக்கு ஆட்டோ, பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கு குறிப்பிட்ட நிறத்தில் முன் மற்றும் பின்புறத்தில் நம்பர் பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு மஞ்சள் போர்டு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், போக்குவரத்து துறை ஆணையர் சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.