ஏடிஎம்-களில் இனி 2000 ரூபாய் நோட்டு கிடைக்காது – மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா..?

0

ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் இந்தியாவின் வங்கி ஏடிஎம்-களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு..!

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து அதற்குப் பதிலாக புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. எனவே அதற்க்கு ஏற்ற வகையில் பழைய ஏடிஎம் மெஷின்களும் சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதைப் பெறுவதற்காக நாட்கணக்கில் வங்கியின் வரிசையில் நின்றதை இந்திய மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டர்.

2000 ரூபாய் நோட்டு கிடைக்காது..!

New indian 2000 Rs Currency Note

இந்நிலையில் கள்ளநோட்டு மற்றும் சில்லரை பிரச்சனையால் இனி வங்கி ஏடிஎம்கள் மற்றும் பணபரிவர்த்தனைகளில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் செலுத்தும் போதோ அல்லது ஏடிஎம் -களில் பணம் நிரப்பும் போதோ 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

எனவே இனி ஏடிஎம் -களில் 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை எனவும் சில்லரை பயன்பாட்டை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஒரு புதிய 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here