குண்ட தூக்கி போட்டுட்டீங்களே.. விக்கி-காக நயன் இவ்வளவு தூரமா இறங்குவாங்க – இனி நிலைமை கஷ்டம் தான்!

0
குண்ட தூக்கி போட்டுட்டீங்களே.. விக்கி-காக நயன் இவ்வளவு தூரமா இறங்குவாங்க - இனி நிலைமை கஷ்டம் தான்!

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருக்கும் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கி – நயன்:

ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்கு பிறகும் இவர்கள் பட வேளைகளில் பிசியாக இருப்பார்கள், நயன்தாரா ஹனிமூனிற்கு நோ சொல்லிவிட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியானது. இருப்பினும் அதை பொய்யாக்கும் வகையில் இந்த ஜோடி தாய்லாந்து பறந்தனர். சில நாட்கள் கழித்து இந்தியா திரும்பிய பிறகு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.

நயன்தாரா திருமணம் முடிந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் தாலிக்கு மரியாதை அளித்து அதை கழட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரை பற்றிய ஒரு ஷாக் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு காரணமாக சொல்லப்படுவது நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட வேண்டாம் என்று கண்டிஷன் போட்டுள்ளார்களாம். வெவ்வேறு காட்சிகள் நடிக்கும்பொழுது போது தாலி இல்லாமல் நடிப்பது சிரமம். இதனால் நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம். தற்போது இந்த செய்தி வெளியாகி நயன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here