குக் வித் கோமாளி புகழ் கல்யாணத்துக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா?? பென்சி பெரிய ஆளு தான்பா!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழுக்கு இப்பொழுது விமர்சையாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஆரம்பக்கட்டத்தில் சின்ன சின்ன வேடத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் வந்து சென்றவர் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தனது தத்ரூப நடிப்பால் இந்த அளவிற்கு முன்னேறி விட்டார். அவரது அந்த ரியாக்சன் தான் செம என்றே சொல்லலாம். அடுத்த வடிவேலு என்று கூட சொல்லலாம். புகழ் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தவர் என்று நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

மேலும் பள்ளி காலத்தில் யாரையோ காதலித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக அவரை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்ட புகழுக்கு திருமணம் செய்ய பெண்கள் கூட்டம் அலைமோத தான் செய்யும். ஆனால் கடந்த 5 வருடங்களாகவே பென்சியை காதலித்து வந்ததாக புகழ் கூறியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குக் வித் கோமாளி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவர்களின் காதலும் மலர்ந்துள்ளது. புகழின் பிரபலத்தை மட்டும் விரும்பாமல் அவரை மட்டுமே விரும்பி காதலித்துள்ள பேன்சிக்கும் தனி பாராட்டுகளை தான் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் புகழுக்கு இருந்த அதே ரசிகர்கள் கூட்டம் பென்சிக்கும் வர வாய்ப்புள்ளது. இந்த ஜோடி பல்லாண்டு சந்தோசமாக வாழ நாமும் வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here