பல த்ரில் காட்சிகளுடன் ‘நயன்தாராவின் நெற்றிக்கண்’ – வேற லெவலில் வெளியான டீஸர்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாரா இதில் பார்வை தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நெற்றிக்கண்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் பட்டையை கிளப்பி வருபவர் நயன்தாரா. திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா சில காலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் நடித்த இமைக்கா நொடிகள் படமும் ஹிட் அடித்தது. இன்று அவரின் பிறந்த நாளும் கூட. இதனால் அவரது தீவிர ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

லாக்டவுன் காரணமாக தள்ளிபோடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது முக்கால்வாசி முடிவடைந்துள்ளது. இந்த படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மேலும் அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு காலையில் ஃப்ரஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலிருந்தே நயன்தாரா பார்வை தெரியாத பெண்ணாக நடித்திருந்தது தெரிந்தது. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் டீஸர் வெளியாகியுள்ளது. பல த்ரில்லான காட்சிகளும் இந்த டீஸரில் உள்ளது. பார்வை தெரியாத பெண்ணாக நயன்தாரா எதிரிகளை வீழ்த்தும் விதமாக கட்டப்பட்டிருந்தது. இது ஒரு கொரியன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் மூலம் நயன்தாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here