ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் – வெளியான தகவல்!!

0
Mookuthi_Amman

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா அவர்களின் முக்குத்தி அம்மன் திரைப்படம் லாக்டவுன் காரணமாக நிலுவையில் இருந்தது. தற்போது தீவாளியில் ஓடிடி தளத்தில் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா

தமிழில் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நயன்தாரா.  முன்னணி நடிகையான நயன்தாரா தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கலக்கி வருபவர்.

லேடி சூப்பர் ஸ்டார் என்றே திரையுலகில் அழைக்க படும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ஆனால் சில ஆண்டுகளாக அவர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இமைக்க நொடிகள், கோலமாவு கோகிலா, அறம், மாயா போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா கோவா சென்று அவரின் பிறந்த நாளை கொண்டாடி வந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Mookuthi_Amman
Mookuthi_Amman

இந்நிலையில் தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த படமான மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here