நயன்தாராவின் நெற்றிக்கண் OTT உரிமையை பெற்ற ஹாட் ஸ்டார்.. வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

0

நயன்தாரா நடிப்பில், விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம் நெற்றிக்கண். இந்த படம் தற்போது OTTயில் வெளியாக உள்ளது. இப்படத்தின் OTT உரிமையை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.

இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் திரைக்கு வர தயாராகிய படம் நெற்றிக்கண். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததால் மாநில அரசு ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டதால் நெற்றிக்கண் படம் வெளியாகுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

தியேட்டர்கள் திறக்க படாததால் சூர்யா, தனுஷ், கார்த்தி போன்ற முன்னனி ஹீரோக்களின் படங்கள் கூடநெட் பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற OTT தளங்களில் வெளியாகி வெற்றி பெற்றது. எனவே விக்னேஷ் சிவனும் நெற்றிக்கண் படத்தை OTT தளங்களுக்கு விற்க ஆர்வம் காட்டினார்.

இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் OTT உரிமையை ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை நயன்தாராவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here