கலர்ஸ் தமிழில் களம் இறங்கும் விஜய் டிவி நடிகை… சீரியல் குழுவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் நடிகை ரேஷ்மா அவர்கள். இவர்  பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கலர்ஸ்  தமிழ் தொலைக்காட்சியில் அபி டைலர் என்ற சீரியலில் கதா நாயகனின் சகோதரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த தகவலை அவர் சீரியல் குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்து உள்ளார்.

சன் டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை ரேஷ்மா.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு மிக பரிச்சயமானவர்  ரேஷ்மா. இவர் ஒரு சில படங்கள் மற்றும்  வாணிராணி, மரகத வீணை, காயத்ரி உள்ளிட்ட ஒரு சில  டிவி சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு உள்ளார்.

இதனையடுத்து இவருக்கு விஜய் டிவியில் மிக  விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலக்ஷ்மி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர், அந்த சீரியலை விட்டு பல காரணங்களால் விலகவே ரேஷ்மா அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் தற்போது  அவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் ஒரு சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

கலர்ஸ் தமிழ் டிவியில் அபி டைலர் என்று புதிய தொடரில் ரேஷ்மா அனாமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். இந்த தகவலை அவர் மிகுந்த குஷியுடன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here