அட்ரா சக்க., நயன் விக்கி தம்பதிக்கு கிடைத்த சர்ப்ரைஸ் – இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட பெருமை!!

0

புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்பட்ட, இந்திய திரைப்பட விழா – 2022ல் நயன் விக்கிக்கு, முக்கிய கௌரவத்துடன் கூடிய  அங்கீகாரம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அரசு கொடுத்த பெருமை:

புதுச்சேரி அரசு சார்பில், இந்திய திரைப்பட விழா – 2022 கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய இந்த விழா வரும் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக நயன் விக்கி தயாரித்த கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்தப் படத்திற்கு 1 லட்சம் ரொக்கப் பரிசுடன், சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்க, படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் பெற்றுக்கொண்டார்.

இது மட்டுமல்லாமல், அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட கூழாங்கல் திரைப்படம், இந்த விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு விருது கிடைத்தது, எங்களின் உழைப்புக்கு கிடைத்த ஒட்டுமொத்த பெருமையாக கருதுகிறேன் என படத்தில் இயக்குனர் வினோத் பேட்டி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here