கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட சோகம்.., மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!

0
கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட சோகம்.., மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!
கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட சோகம்.., மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா  முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஜடேஜா!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வந்த ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டார். ஆனால் அவருக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வந்ததால் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், தனது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜா, தான் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் எனக்கு அறுவை சிகிச்சை செய்ய காரணமாக இருந்த பிசிசிஐ, மருத்துவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து பயிற்சியை தொடங்கி அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஜடேஜாவின் இந்த செயல் மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்திய ஆல்ரவுண்டர் பல சாகச வேலையை செய்யும் போது உலக கோப்பையை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் அதை கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளாமல் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விலகுவது வேதனையாக உள்ளது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here