அர்ஜுனா விருது தகுதி பெற்ற இளம் தமிழக வீரர்கள்…, சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

0
அர்ஜுனா விருது தகுதி பெற்ற இளம் தமிழக வீரர்கள்..., சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்!!
அர்ஜுனா விருது தகுதி பெற்ற இளம் தமிழக வீரர்கள்..., சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

இந்தியாவில் வழங்கப்படும் அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்திய விருதுகள்:

இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களை கவுரவிக்கும் வகையில், அர்ஜுனா, கேல் ரத்னா மற்றும் துரோணாச்சார்யா உள்ளிட்ட விருதுகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு தீவிரமாக இறங்கி இருந்தது. இதன் முடிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 30 ம் தேதி, இந்திய குடியரசு தலைவரிடம் இருந்து விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த விருது பெற இருப்போருக்கான முழு பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் கடந்த காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி என பதக்கங்களை குவித்து அசத்தியிருந்தார். இதனால், விளையாட்டு துறையில் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பெற உள்ளார்.

இந்தியாவில் 474 பேர் கொரோனாவால் பாதிப்பு.., மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

இவரை தொடர்ந்து, தமிழக சேர்ந்தவர்களான, உலகின் நம்பர் 1 வீரரை பலமுறை தோற்கடித்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் மற்றும் காது கேளாதோர் பிரிவில் மதுரையின் ஜெர்லின் அனிகா ஜே உள்ளிட்ட 25 பேர் அர்ஜுனா விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அஸ்வினி(தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here