திருமணம் முடித்த நட்சத்திராவை மீண்டும் சீண்டும் சீரியல் நடிகை ஸ்ரீநிதி – திகைப்பில் ரசிகர்கள்!!

0
திருமணம் முடித்த நட்சத்திராவை மீண்டும் சீண்டும் சீரியல் நடிகை ஸ்ரீநிதி - திகைப்பில் ரசிகர்கள்!!

அண்மையில் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா குறித்து, போட்டோக்களை அவரது தோழியும் நடிகையுமான  ஸ்ரீநிதி பதிவிட்டு வருகிறார்.

 ஸ்ரீநிதி கருத்து:

சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். சமீப தினங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர், நடிகை சிம்பு தன்னை காதலிப்பதாகவும், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அதுபோக தனது தோழியான நட்சத்திரா குறித்தும், அவரது திருமணம் குறித்தும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இதனால் பொறுமை இழந்த நட்சத்திரா ஒரு கட்டத்தில், அவருக்கு ஏதோ மனநிலை சரியில்லை என பகிரங்கமாக வீடியோ வெளியிட்டார். இது ஒரு புறம் இருக்க நடிகை நட்சத்திராவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு தனது தோழி ஸ்ரீநிதிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் சில காலம் அமைதியாக இருந்த ஸ்ரீநிதி தற்போது மீண்டும் இவர் குறித்து பதிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளார். இவருடன் எடுத்துள்ள போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்துவிட்டது என கமெண்ட் செய்து வருகின்றனர். இது போக பலரும் நடிகை ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here