உயிர் வாழத் தகுதியான புது கிரகம் கண்டுபிடிப்பு – 17 வயது மாணவனின் உதவியோடு கண்டுபிடித்தது நாசா

0
உயிர் வாழத் தகுதியான புது கிரகம் கண்டுபிடிப்பு - 17 வயது மாணவனின் உதவியோடு நாசா கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 17 வயது பயிற்சி மாணவர் ஒருவரின் உதவியோடு உயிர் வாழத் தகுதியான இன்னொரு கிரகத்தை கண்டறிதந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பயிற்சி மாணவரின் சாதனை

டிரான்ஸிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) என்ற ஒரு உயிர் வாழத் தகுதியான கிரகத்தை நாசா கண்டறிந்ததாக நாசா அறிவித்தது. மேலும் பிளானட் ஹண்டர்ஸ் டெஸ் குடிமகன் அறிவியல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குக்கியர் என்ற மாணவரின் அரிய கண்டுபிடிப்பு எனவும் தெரிவித்துள்ளது. நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் கோடைகால பயிற்சியாளராக இருந்த அந்த மாணவர் அதன் ஒரு பகுதியாக 3 நாள் பயிற்சியாக நாசா வந்துள்ளார்.

17 வயதான அந்த மாணவருக்கு நாசா விஞ்ஞானிகள் அவரிடம் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) எனும் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் உபகரணத்தை அளித்தனர். இந்த கருவியானது நாசாவின் விண்வெளி பயணத் திட்டத்திற்கான ஒரு தொலைநோக்கி .ஆகும். இதனை வைத்து தீவிர ஆய்வினை மேற்கொண்ட குக்கியர் பதிவேற்றப்பட்ட நட்சத்திர ஒளியின் மாறுபாடுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

புதிய கிரகம் கண்டுபிடிப்பு

குக்கியர் கண்டுபிடித்த புதிய கிரகம் TOI 1338 b பூமியை விட 6.9 மடங்கு பெரியது மற்றும் பூமியிலிருந்து 1,300 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் நட்சத்திரங்களைப் போலவே கிட்டத்தட்ட ஒரே வட்டப்பாதையில் சுற்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here