தமிழக பள்ளி மாணவர்களுக்கு ” சூப்பர் திட்டம்”., ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு! இதுல இவ்வளவு சிறப்புகள் இருக்கா!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு
தமிழக பள்ளி மாணவர்களுக்கு " சூப்பர் திட்டம்"., ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு! இதுல இவ்வளவு சிறப்புகள் இருக்கா!!

அரசுப் பள்ளியில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை தமிழக அரசு நாட உள்ளது.

அரசு பள்ளி

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் 32 ஆயிரத்துக்கும் மேல் இயங்கி வரும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி, உள்கட்டமைப்பு போன்றவைகளை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி அரசு பள்ளிகளை சீரமைக்க, புதுப்பிக்க, உட்கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்த ரூ.800 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது போன்ற திட்டங்களுக்காக அரசு பங்களிப்பு மட்டுமல்லாமல் தற்போது தனியார் உதவியையும் அரசு நாட உள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், தன்னார்வ ஆர்வலர், தொழில் அதிபர் என அனைவரின் பங்களிப்பையும் அரசு எதிர்பார்த்துள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை., இந்தந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வெளியான அறிக்கை!!

அதனால், இந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கான அரசுப்பள்ளியை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த நிதி மூலமாகவோ, உழைப்பு மூலமாகவோ உதவ “நம்ம ஸ்கூல்” என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து தனது பங்களிப்பின் பரிமாற்றங்களை பரிசோதித்து கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தை இன்று மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here