ரெம்ப ஈஸியா வீட்லயே செய்யுற ஹனி சிக்கன்.., இந்த மாதிரி Try பண்ணி பாருங்க.., சுவை தூளோ தூள்!!

0
ரெம்ப ஈஸியா வீட்லயே செய்யுற ஹனி சிக்கன்.., இந்த மாதிரி Try பண்ணி பாருங்க.., சுவை தூளோ தூள்!!
ரெம்ப ஈஸியா வீட்லயே செய்யுற ஹனி சிக்கன்.., இந்த மாதிரி Try பண்ணி பாருங்க.., சுவை தூளோ தூள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த சிக்கனை வைத்து வித்தியாசமான முறையில் ஹனி சிக்கன் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • சிக்கன் – 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 250 கிராம்
  • கான்பிளவர் மாவு – 50 கிராம்
  • சிக்கன் மசாலா – 2 டீஸ்பூன்
  • தேன் – 100 கிராம்
  • சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
  • டொமேட்டோ சாஸ் -2 டீஸ்பூன்
  • தயிர் – 50 கிராம்

செய்முறை விளக்கம்;

ஹனி சிக்கன் ப்ரை செய்வதற்கு முதலில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் சிக்கன் மசாலா சேர்த்து கொள்ளவும். பின் சிறிதளவு தயிர், கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், மசாலா தடவி வைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அத்துடன் டொமேட்டோ சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை சம அளவில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 100 கிராம் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இத்துடன் நாம் பொரித்து வைத்துள்ள சிக்கனை போட்டு கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான ஹனி சிக்கன் ரெடி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here