Sunday, May 5, 2024

இனப்படுகொலையினை ஒரு போதும் நான் ஆதரிக்கவில்லை – முத்தையா முரளிதரன் பேச்சு!!

Must Read

இணையத்தளத்தில் தற்போது வைரலாக அனைவராலும் எதிர்க்கப்படுவது “800” திரைப்படம். இது குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ‘தான் ஒரு போதும் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆதரிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான திரைப்படம்:

இந்திய அளவில் கடந்த சில நாட்களாக வைரலாக பேசப்படும் படம் “800” திரைப்படம். இலங்கை மக்கள் இன படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை அரசுக்கு ஆதரவாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை தான், இந்த படம். இந்த படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த ஹேஷ்டாக் இல் 40 ஆயிரம் பேர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இப்படியாக இருக்க பிரபல இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் முத்தையா முரளிதரன் ஒரு தே சதுரோகி என்று குறிப்பிட்டு இருந்தார். அதே போல் அரசியல் பிரமுகர்களான “நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் போன்றோர் தங்களது கண்டனங்களை பதிவிட்டனர்.

முத்தையா விளக்கம்:

இன்று இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் காரணமான முத்தையா முரளிதரன் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “நான் கிரிக்கெட் துறையில் எவ்வாறு சாதித்தேன் என்பதனை பற்றிய படம் தான் “800”. எனக்கு தமிழ் தெரியாது என்று ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர், அது தவறான செய்தி. சிங்களர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரும் எனக்கு ஒன்று தான். நான் என் மலையக மக்களுக்கு உதவிகளை செய்ததை விட தமிழர்களுக்கு தான் அதிகமாக செய்துள்ளேன்”

வெறும் ஒரு ரூபாய் வைத்து 25 லட்சம் சம்பாதிக்கலாம் – ஆன்லைன் ஏல ஆச்சர்யங்கள்!!

“தமிழர்களை கொன்று குவித்த நாள் எனக்கு மகிழ்ச்சிகரமான நாள் என்று சிலர் திரித்து கதை எழுதுகின்றனர், அது முற்றிலும் தவறான செய்தி. நான் என்றுமே படு கொலைகளை ஆதரிக்கவில்லை, அதேபோல் ஆதரிக்கவும் மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -