ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்!!

0

பெங்களூரில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் பாட்சா. இவர் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது நிலத்தை தனமாக வழங்கினார். அதன் மதிப்பு ரூ.80லட்சம்.

இஸ்லாமியர் பாட்சா

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடுகோடி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான HMG.பாட்சா. இவர் அங்கு சொந்தமாக தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பெங்களூர் புறநகரை சேர்ந்த வழக்கேற்புரா கிராமத்தில் சொந்தமாக உள்ள அவர் நிலத்தை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவிலில் கடந்த 6 மாதமாக மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு வரும் பக்தர்கள் அக்கோயிலை சுற்றி வருவதற்கு சிரமப்படுவதை பாட்சா கவனித்தார்.

‘குறிப்பிட்ட நிறுவன ஜிபிஎஸ் கருவிகளை தான் பொறுத்த வேண்டும்’ – போக்குவரத்து துறை உத்தரவிற்கு தடை!!

அவர்கள் அவ்வாறு சிரமப்படுவதை கவனித்த பாட்சா தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை தனமாக கொடுக்க முன் வந்தார். அவர் தனமாக கொடுக்கும் அப்பகுதியின் விலை ரூ.80 லட்சம். இது குறித்து அவர் கூறுகையில், “ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்கோயிலை சுற்றி வர மிகவும் சிரமப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சிரமப்படுவதற்கு காரணம் இடப்பற்றாக்குறையே, எனவே நன் எனது நிலத்தின் ஒரு பகுதியை தனமாக கொடுக்க உள்ளேன்”என்றார். இதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here