2020 இல் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்கள் – பிரதமர் மோடி 7வது இடம்!!

0
PM Modi
PM Modi

2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் ட்வீட் செய்யப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார், அமெரிக்க அதிபர் பைடேன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடி ஏழாம் இடத்தில் உள்ளார்.

அதிகம் ட்வீட் செய்யப்பட்டவர்கள்:

தற்போது உள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் பாலமாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. சாமானிய மக்கள் கூட சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாக முடியும். இதன்படி சமூகவலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்தில் உள்ளார்.அவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

kamala harris speech
kamala harris speech

அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட “கமலா ஹாரிஸ்” இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். இவர் 10 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ரேப்பர் கன்யே வெஸ்ட் மற்றும் மறைந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் ஆகியோரும் உள்ளனர்.

டி 20 பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியீடு – கேஎல் ராகுல் & விராட் கோஹ்லி முன்னேற்றம்!!

அதேபோன்று #COVID19 என்ற ஹேஷ்டேக் பிரபலமான ஹேஷ்டேக்காக உள்ளது. இந்த ஹேஷ்டேக் 400 மில்லியன் 40 கோடி முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாவதாக அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலை குறித்து அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here