சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியினை சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் கோலி அவர்களது முந்தய புள்ளிகளில் இருந்து முன்னேறி டாப் 10க்குள் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா மேட்ச்:
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. முதலில் ஒரு நாள் போட்டிகள் தான் நடந்தது. இதில் முதல் இரண்டு நாட்கள் இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடாமல் தோற்று விட்டனர். இதற்கு அடுத்து ஆறுதல் வெற்றி அடைந்தனர். அதன் பிறகு, டி 20 போட்டிகளில் அனைத்து வீரர்களும் அபாரமாக விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த போட்டிகளில் கே.எல். ராகுல், தவான், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, சாஹல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் தான் அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர். இதற்கு அடுத்ததாக வரும் 17 ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சிகளில் வீரர்கள் இறங்கியுள்ளனர். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி புள்ளிகள் கணக்கில் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
‘நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறேன்’ – முதல்வர் பழனிசாமி பேட்டி!!
இந்தியாவின் ராகுல் ஆரம்பத்தில் நான்காம் இடத்தில் இருந்தார். தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போல் இந்திய அணியின் கேப்டன் விராட் ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.