Thursday, April 25, 2024

‘குறிப்பிட்ட நிறுவன ஜிபிஎஸ் கருவிகளை தான் பொறுத்த வேண்டும்’ – போக்குவரத்து துறை உத்தரவிற்கு தடை!!

Must Read

குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை தான் பொறுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துக்கு துறை உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துக்கு துறை உத்தரவு:

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துக்கு துறை ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு உத்தரவினை வழங்கினர். குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை தான் வாகனங்களில் பொறுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்து இருந்தனர். காரணம், தமிழகத்தில் ஜி.பி.எஸ்., வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் ஜி.பி.எஸ். வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2018 ஆம் ஆண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் 140 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிபிஎஸ் கருவிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக ஸ்மார்ட் மொபிலிட்டி அச்சொசியாடின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தனர். தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டும் பொறுத்த வேண்டும் என்பது விரோதமானது என்றும் நியாயம் இல்லாத ஒன்று என்று கூறப்பட்டது. அதனால் இந்த அரசனையினை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பள்ளி மாணவர்களுக்கு இனி “நோ ஹோம் ஒர்க்” – மத்திய அரசு புதிய உத்தரவு!!

இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தற்போது எந்த மாதிரியான தகுதிகளை வைத்து குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் மட்டும் தேர்தெடுக்கப்பட்டன? என்றும் தொழில்நுட்ப தகுதிகளை பற்றியும் விவரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு விளக்கம் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் போக்குவரத்துத்துறை வழங்கிய உத்தரவிற்கு இடை கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இணையவழிக் கல்வியில் 10 நாட்களில் MBA பட்டப்படிப்பு? யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -