குழந்தைங்க சரியா சாப்பிட மாட்டேன்றாங்களா.?? Mushroom Stuffed சப்பாத்தி செஞ்சு குடுங்க.! மிச்சமே வைக்காம சாப்ட்ருவாங்க.!

0

தேவையான பொருட்கள்

Mushroom, பெரிய வெங்காயம், கோதுமை மாவு, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஜீரா தூள், சோம்பு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை


முதலில் கோதுமை மாவை நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அது நன்கு வதங்கியதும் சிறிது மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் ஜீரா தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பின்பு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. 5 நிமிடம் அதனை மூடி வைக்கவும். பின் காளான் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். அதை ஆறவைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை உருட்டி தேய்த்து கொள்ளவும். அதன் பின் அதில் நாம் செய்து வைத்த காளான் மசாலாவை உள்ளே வைத்து மடக்கி கொள்ளவும். பின்பு அதனை உருட்டி மெதுவாக தேய்த்து கொள்ளவும்.

பிறகு அதனை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி நன்கு வேக வைக்கவும். இப்பொழுது Mushroom Stuffed சப்பாத்தி ரெடி. இதற்கு கெட்டி தயிரை வைத்து கூட சாப்பிடலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here