மட்டன் சுவையை அள்ளித்தரும் சுவையான காளான் பிரியாணி., அதுவும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

0
மட்டன் சுவையை அள்ளித்தரும் சுவையான காளான் பிரியாணி., அதுவும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
மட்டன் சுவையை அள்ளித்தரும் சுவையான காளான் பிரியாணி., அதுவும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

பொதுவாக பலரின் பிடித்தமான உணவு என்னவாக இருக்கும் என்று பார்த்தால் அதில் பிரியாணி தான் முதல் இடத்தை பிடித்திருக்கும். அந்த பிரியாணியை எப்போதும் போல மட்டன் மற்றும் சிக்கனில் சமைக்காமல், புரத சத்துக்கள் அதிகம் இருக்கும் காளானில் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி – 1/ 2 கிலோ (2 கப்)
  • காளான் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 3(நறுக்கியது)
  • தக்காளி – 3 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)
  • புதினா – 1/4 கப் (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
  • தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

    நெய் – 3 டேபிள் ஸ்பூன்

  • தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • பிரியாணி இலை – 1
  • ஏலக்காய் – 3
  • இலவங்கம் – 2
  • கிராம்பு – 5
  • தண்ணீர் – 3 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

இந்த காளான் பிரியாணி செய்வதற்கு நாம் வாங்கி வைத்துள்ள காளானை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதோடு பட்டை, இலவங்கம், கிராம், பிரியாணி இலை போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் இதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

“ஏய் தாய் கிழவி” பொன்னம்பலத்தின் மகளை பார்த்துள்ளீர்களா? அட.., அவரை அப்படியே உரிச்சி வச்சு இருக்காங்களே!!

இதோடு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி விடவும். பச்சை வாசனை போனவுடன் தயிர்,காளானை இதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்களுக்கு முன் கழுவி ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை அதில் போட்டு, அதில் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். பின் அதை லைட்டாக கிண்டி விட்டு குக்கரை மூடி போட்டு மூடவும். மேலும் ஒரு 2 விசில் அல்லது 10 நிமிடங்களுக்கு பின் அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான காளான் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here