தாறுமாறாக அதிகரித்த பெட்ரோல் விலை..! 100 ரூபாயை தாண்டிய முதல் மெட்ரோ நகரம்!!!

0

மும்பையில் பெட்ரோல் விலை இன்று ரு. 100 ஐ தாண்டியுள்ளது. மெட்ரோ நகரமான மும்பையில் பெட்ரோல் லிட்டர் 100.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு. 92.17 ஆகவும் விற்கப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றுக் காரணமாக மாநில அரசுகள் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் பல மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் பயன்பாடு குறைந்துள்ள போதும் தொடர்ந்து பெட்ரோல்,டீசலின் விலை அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் மும்பையில் 100.19 ரூபாயாகவும், டீசல் விலை 92.17 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.அதே போல் டெல்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு. 93.94 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு. 84.89 ஆகவும் உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.51 ரூபாய்க்கும், டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை இன்று ரு.100 ஐ கடந்த நிலையில் அடுத்து எந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய் அடையும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here