மாநகராட்சியில் இன்று முதல் பொது முடக்கம் அமல் – மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவு!!

0
மாநிலத்தில் வேகமெடுக்கும் புது காய்ச்சல் - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அரசு!அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
மாநிலத்தில் வேகமெடுக்கும் புது காய்ச்சல் - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அரசு!அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

மும்பை மாநகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இன்று முதல் ஜனவரி 7 வரை பொது முடக்கம் அமல்படுத்துவதாக அம்மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுமுடக்கம் அமல் :

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் பல பகுதிகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், நேற்று வரை 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  85 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறிய பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நபர் இறந்துள்ளார். நிலைமையை சமாளிக்க, டிசம்பர் 30ம் தேதியான இன்று முதல் ஜனவரி 7, 2022 வரை கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகரத்தில் இதுவரை 8,060 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த உத்தரவு படி பொதுமக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம்  1860 இன் பிரிவு 188 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை ஆணையர் சைதன்யா எஸ் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here