மும்பை ஐகோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு – மேலும் இருவர் கைது!!

0
arnab koswami
arnab koswami

அர்னாப் கோஸ்வாமி 2018 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை வழக்கிற்கு கைது செய்யப்பட்டார். மூடப்பட்ட இந்த வழக்கை விசாரிக்க மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் போலீசார்க்கு உத்தரவிட்ட நிலையில் மேலும் இருவர் கைதாகி உள்ளனர்.

இருவர் கைது

ராய்காட் மாவட்டத்தின் உள்ள அலிபாக்கை சேர்ந்தவர் அன்வய் நாயக். இவர் கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். 2018 ஆம் ஆண்டு பணிக்கான நிலுவை பணத்தை ரிபப்லிக் டி.வி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ரூ 5.40 கோடி தராமல் இருந்துள்ளார். அதற்காக அன்வய் நாயக் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

arnab koswami arrest
arnab koswami arrest

இருவரின் தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி தூண்டியதாக தெரிந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று நேரடியாக அர்னாப் வீட்டிற்கே சென்று அலிபாக் போலீசாரால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் மேலும் இருவரான பெரோஸ் சேக் மற்றும் நிதேஷ் சர்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் வழங்க மறுப்பு

இந்த 3 பேரையும் வருகிற 18 ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா பரிசோதனைக்கு பின்னர் இவர்கள் 3 பேரையும் தற்போது அலிப்பாகில் உள்ள பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மும்பை தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

arnab koswami
arnab koswami

இவர்கள் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அதற்கான மனுத்தாக்களுக்கான விசாரணை நேற்று நடைபெற்றது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி இதற்கான முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here