பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசிரியர்.,, வைரல் வீடியோ!! அதிரடி காட்டிய கல்வி அதிகாரி!!

0
பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசிரியர்.,, வைரல் வீடியோ!! அதிரடி காட்டிய கல்வி அதிகாரி!!
பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசிரியர்.,, வைரல் வீடியோ!! அதிரடி காட்டிய கல்வி அதிகாரி!!

மத்திய பிரதேச மாநிலத்தில், பள்ளி ஆசிரியர் குடித்துவிட்டு வளாகத்தில் செய்த பிரச்சனை காரணமாக அவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

மத்திய பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில்.கானியா தானா தொகுதிக்கு உட்பட்ட போட்டா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதன் வளாகத்திற்கு உள்ளேயே ஆசிரியர் ஒருவர் மது அருந்தி, அசைவ உணவு சாப்பிட்டு அநாகரிகமாக நடந்துள்ளார். இந்நிலையில் இவர் பள்ளியின் விதிகளை மீறியதன் பேரில் நேற்று தலைமை அதிகாரியால் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடித்ததை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் ஒரு ஆசிரியர் என்பதை மறந்து இப்படி அவர் நடந்து கொள்வது சரி இல்லை என பல தரப்பில் இருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அட்ரா சக்க.,3 மாதங்கள் வரை கெட்டுப்போகாத பால் பாக்கெட்டுகள் – ஆவின் நிறுவனத்தின் சூப்பர் அறிமுகம்!!

மேலும் அந்த ஆசிரியர் கிராமவாசிகளை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மாவட்ட கல்வி அதிகாரி அசோக் ஸ்ரீவஸ்தவா ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரச்சனை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here