அட்ரா சக்க.,3 மாதங்கள் வரை கெட்டுப்போகாத பால் பாக்கெட்டுகள் – ஆவின் நிறுவனத்தின் சூப்பர் அறிமுகம்!!

0
அட்ரா சக்க.,3 மாதங்கள் வரை கெட்டுப்போகாத பால் பாக்கெட்டுகள் - ஆவின் நிறுவனத்தின் சூப்பர் அறிமுகம்!!
அட்ரா சக்க.,3 மாதங்கள் வரை கெட்டுப்போகாத பால் பாக்கெட்டுகள் - ஆவின் நிறுவனத்தின் சூப்பர் அறிமுகம்!!

பலதரப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்களில், 3 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் நவீன பசும் பால் பாக்கெட்டுகளை, ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆவின் அறிமுகம்:

ஒரு சில கிராமப்புறங்கள் மற்றும் பெரும்பாலான நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பரவலாக பால் பாக்கெட்களை பயன்படுத்துகின்றனர். அரசின் ஆவின் நிறுவனமும், தனியாரின் டெய்ரி, மதர், ஆரோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தீவன விலைவாசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த பால் பாக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது வரை உள்ள பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன வசதி கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு இந்த பால் பாக்கெட் கெட்டு போகும்.

 

pcod பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கீங்களா?? உங்களுக்காக தான் இந்த பதிவு!

தற்போது இதற்கு மாற்று வழியாக “ஆவின் டிலைட்” என்ற நிறுவனம், 3 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் பசும் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. குளிர்சாதன வசதி இல்லாமல், 90 நாட்கள் வரை இதை பயன்படுத்தலாம். எவ்வித வேதிப்பொருட்களும் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட 500 மில்லி பால் பாக்கெட் ரூபாய் 30 க்கு விற்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here