பாரா பேட்மிண்டனில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்…, ஆரம்பமே அமர்க்களம்!!

0
பாரா பேட்மிண்டனில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்..., ஆரம்பமே அமர்க்களம்!!
பாரா பேட்மிண்டனில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்..., ஆரம்பமே அமர்க்களம்!!

பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நவம்பர் 1 (நேற்று) முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 38 பேர் கொண்ட இந்திய வீரர்களை பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர் வழி நடத்தி சென்றுள்ளனர். இதில், தனது முதல் போட்டியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில், கலப்பு இரட்டையர் (SH6) பிரிவில் நித்யா ஸ்ரீ மற்றும் கிருஷ்ணா நகர் இணைந்து, எகிப்தின் யாஸ்மினா மற்றும் ஸ்பெயினின் இவான் செகுரா எஸ்கோபார் ஜோடியை எதிர்கொண்டது. இதில், இந்திய ஜோடி ஆரம்ப முதல் வேகமாக செயல்பட்டு 21-8 மற்றும் 21-9 என்ற செட் கணக்கில் தொடர்ந்து வெற்றி பெற்று போட்டியை கைப்பற்றியது.

T20 WC 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய நெதர்லாந்து!!

இதே போல் பெண்களுக்கான ஒற்றையர்(SH6) பிரிவில், இளம் வீராங்கனையான ஸ்ரே, ஹாங்காங்கின் லாம் சிங் யுங்கை எதிர்த்து 21-4, 21-4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். நடப்பு சாம்பியனான மனிஷா ராமதாஸ் SU5 போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை எதிர்கொண்டு, 21-10, 21-5 என்ற செட் கணக்கில் வெற்றி உறுதி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here