மகளை விட மாணவன் அதிக மதிப்பெண் எடுத்ததால் விஷம் கொடுத்த தாயார் – புதுச்சேரியில் நடந்த துயர சம்பவம்!!

0

புதுச்சேரியில் தன் மகளுடன் படிக்கும் மாணவன் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குளிர்பானத்தில் விஷம் மாத்திரை:

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் கடும் பயத்தில் இருக்கின்றனர். இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசாங்கம் ஒவ்வொரு பள்ளிக்கும் விழிப்புணர்வு முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு.., இனிமேல் இந்த ரூல் கட்டாயம் - வெளியான முக்கிய தகவல்!!

இந்நிலையில் புதுசேரியில் உள்ள மாணவியின் பெற்றோர் செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டன் நேற்றும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு மாணவியின் பெற்றோர் காலை 11 மணியளவில் அந்த மாணவனுக்கு குளிர்பானத்தை கொடுக்குமாறு அப்பள்ளியின் வாட்ச்மேன் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த பெண்மணி கூறியதை போன்று வாட்ச்மேன் பால மணிகண்டன் மாணவனிடம் கொடுத்துள்ளார், அந்த மாணவனும் மதிய இடைவேளையில் குடித்து உள்ளார். மதிய நேரம் விடுமுறை அளித்த பிறகு மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மயங்கி விழுந்த மாணவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது ஒரு மாணவியின் தாயார் குளிர்பானத்தை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் அந்த தாயாரை கைது செய்து விசாரணை செய்த போது குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே நான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை செய்ததில், அந்த மாணவன் நன்றாக படிப்பதாகவும் தன் மகளை விட மாணவன் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், .அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் அம்மா அடிக்கடி மகளுடன் தகராறு செய்து வந்த நிலையில் மணிகண்டனை கொல்ல முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here