சாப்பாடு இல்லை.. பெற்ற 5 குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய தாய் – குடும்ப தகராறு காரணமா..?

0

உத்தரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தில் கணவன் மனைவி இவர்களுக்கிடையே குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த பெண் பெற்ற குழந்தைகள் 5 பேரையும் கங்கை நதியில் தூக்கி வீசிபட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கொடூர செயல்..!

உத்திரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தில் ஜஹாங்கிராபாத் பகுதியில் வசித்து வரும் தம்பதி மஞ்சு – மிருதுள் யாதவ் இவர்களுக்கு மாதேஸ்வரி, ஷிவ்ஷங்கர், கேஷவ் பிசாத், ஆர்த்தி மற்றும் சரஸ்வதி 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டையும் தகராறும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் வீட்டில் இருவருக்கும் பிரச்சனை நடந்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு 3 பெண் குழந்தைகள் உட்பட தன்னுடைய 5 குழந்தைகளையும் கங்கை நதிக்கு அழைத்து சென்று நீரில் மூழ்கடித்தார்.

மதுபானம் கிடைக்காததால் கிருமி நாசினியை குடித்த இளைஞர் பலி – கோவையில் சோகம்..!

குழந்தைகளை கங்கையில் வீசியபிறகு பிறகு கரையிலேயே உட்கார்ந்து மஞ்சு அழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் அந்த பகுதியாக வந்த கிராம மக்கள் மஞ்சுவிடம் என்ன ஏதென்று கேட்கவும் நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார். இதனை கேட்ட மக்கள் போலீசார்களுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

போலீசார் விசாரணை..!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் ஆர்த்தி 12 வயது, சரஸ்வதி 10 வயது ஆகியோரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோவையில் பிரியாணி கேட்டு அடம்பிடித்த கொரோனா நோயாளி..!

மாதேஸ்வரி, ஷிவ்ஷங்கர், கேஷவ் பிசாத் ஆகியோரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் மஞ்சுவிடம் நடந்து வருகிறது. இந்த பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தினக்கூலி செய்துதான் குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here