மதுபானம் கிடைக்காததால் கிருமி நாசினியை குடித்த இளைஞர் பலி – கோவையில் சோகம்..!

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் அனைத்து கல்லூரி, தொழிற்சாலைகள், சிறு குறு தொழில்கள்,அரசு அலுவலகங்கள் கடைகள் மற்றும் டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் போதைக்காக வேறு வழியை கையாள்கின்றனர்.

திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை

தமிழகத்தில் மதுபானங்களை திருட்டுத்தனமாக ஒரு வாரமாக விற்று வந்தனர் இப்போது அதுக்கும் தட்டுப்பாடு ஆகிவிட்டது இதனால் மாது கிடைக்காத விரக்தியில் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோவையில் நடந்த கொடூரம்

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அலுவலக வீதியை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவருடைய மகன் பெர்னாண்டஸ் வயது 35.இவர் சூலூரில் வசித்து சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இந்த கம்பெனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில், நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமி நாசினி (சானிடைசர்) வழங்கப்பட்டது.

இதை பெர்னாண்டஸ் தனது வீட்டிற்கு கொண்டு வந்து கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்துள்ளார். நேற்றும் (10.மார்ச்.2020) போதைக்காக சானிடைசரை குடித்து விட்டு தூங்கி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை 02.00 மணிக்கு வீட்டில் அவர்  வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிச்சி அடைந்த அவரது மனைவி, பெர்னாண்டசை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கொண்டு சென்ற போது வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அவரது மனைவி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இறந்து போன பெர்னாண்டசுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களது நிலை பரிதாபத்துக் குரியதாக மாறி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here