
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இன்று டெல்லி அணியை எதிர்த்து மோத உள்ள நிலையில், தோனியால் நிகழ்ந்த மாபெரும் சாதனை ஒன்று வெளியாகி உள்ளது.
ஐபிஎல்:
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மைதானங்களில் ரசிகர்கள் நிறைந்த அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 7 வாரங்களை கடந்துள்ள இந்த ஐபிஎல் தொடரில், CSK அணியானது தொடர்ந்து ரசிகர் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, Ormax Media- வானது நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து எந்த அணி மற்றும் வீரரை அதிக அளவில் ரசிகர்கள் ஷேர் மற்றும் தேடுகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறது. இதில், தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியானதில் இருந்து, இவரை குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்துள்ளது.
ரூ.2,000 மாற்றனுமா., இந்த நாட்களில் மட்டும் வங்கிக்கு போயிடாதீங்க?? விடுமுறை பட்டியல் வெளியீடு!!!
இதனால், தொடர்ந்து 7 வது வாரமாக CSK யின் தல தோனி மிகவும் பிரபலமான ஐபிஎல் வீரராக வலம் வருகிறார். மேலும், இவருடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் மிகவும் பிரபலமான அணியாக உள்ளது. CSK அணியானது, இன்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்ய டெல்லி அணிக்கு எதிராக மோத உள்ளது.