2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் கடைகளில் செல்லுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

0
2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் கடைகளில் செல்லுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!
2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் கடைகளில் செல்லுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்க்கு தடை விதித்து, 2000 ரூபாய் புதிய வடிவ நோட்டுகளை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரூ.2,000 நோட்டும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிர்ச்சி தகவலை அறிவித்தது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

எனவே தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கி அக்கவுண்டில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

IPL 2023: தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும் CSK & தல தோனி…, இந்த விஷயத்தில் இவர்களை அடிச்சுக்க யாராலும் முடியாது!!

இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று வதந்திகள் சமூக வலைதள பக்கத்தில் தீயாய் பரவின. தற்போது இதைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மதுபான கடைகளில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று இணையத்தில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது. அப்படி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here