இந்தியாவில் கொரோனா பாதிப்பில் குணமடைந்த 51.08 சதவீதம் பேர்..!

0
corona virus cases
corona virus cases

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால் வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,419 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Corona Treatment
Corona Treatment

ஜெ அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு – சரிந்த திமுக எம்எல்ஏ.,களின் எண்ணிக்கை..!

இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,67,797 ஆக அதிகரித்து உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பில் இருந்து 51.08% பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,53,106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 901 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 9,520 பேர் உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here