Home செய்திகள் அரசியல் ஜெ அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு – சரிந்த திமுக எம்எல்ஏ.,களின் எண்ணிக்கை..!

ஜெ அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு – சரிந்த திமுக எம்எல்ஏ.,களின் எண்ணிக்கை..!

0
ஜெ அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு – சரிந்த திமுக எம்எல்ஏ.,களின் எண்ணிக்கை..!
J Anbazagan

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்களின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக பேரவை செயலாளர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

எம்எல்ஏ எண்ணிக்கை:

திமுக கட்சிக்கு இந்த வருடம் சரியானதாக அமையவில்லை. கடந்த பிபரவரி 27ம் தேதி திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, அதற்கு அடுத்த நாளே குடியாத்தம் தி.மு.க., எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதால் திமுக எம்எல்ஏ எண்ணிக்கை 100ல் இருந்து 98 ஆக குறைந்தது. பொதுவாக ஒரு தொகுதி காலியானால் அதற்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ளதாலும், கொரோனா பாதிப்பு காரணமாகவும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

திமுக  எம்எல்ஏ  அன்பழகன்
திமுக எம்எல்ஏ அன்பழகன்

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட ‘பூட்டு தயாரிக்கும் தொழில்கள்’ – ஒரு பார்வை..!

இந்நிலையில் கொரோனவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அவரின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி காலியானதாக பேரவைத் தலைவர் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 97 ஆக குறைந்து உள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here