முதன்முறையாக சீனாவில் குரங்கு அம்மை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.,, கட்டுப்பாடுகள் தீவிரம்!!

0

உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு இருந்து வருகிறது. இந்த வகையில் தற்போது சீனாவில் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

குரங்கு அம்மை காய்ச்சல்:

கடந்த 2 1/2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் அவல நிலைக்கு தள்ளிய கொரோனா எனும் பெருந்தொற்று இன்னும் மக்களை விட்டபாடில்லை. மேலும் கொரோனாவை தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. முதலில் கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளது.

மேலும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து குரங்கு அம்மை காய்ச்சலைத் கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் சீனாவில் முதன் முதலாக குரங்கு அம்மை நோய் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது வெளிநாட்டில் இருந்து சோங்கிங் நகரம் வந்த ஒரு நபர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நோயால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருடன் பயணம் செய்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here