அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் வெப் சீரிஸ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!!

0

நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகிவரும் ஃபால் என்கிற வெப்சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறது.

ஃபால் ஃபர்ஸ்ட் லுக்

இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிப்பில் ஃபால் என்கிற வெப் சீரிஸ் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த ஃபால் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரிலீஸாகி வெகுவான பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப்,நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களும் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, 24 மணி நேரம் மட்டுமே நடந்த விஷயங்கள் அனைத்தும் ஞாபகம் இருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணின் கதையைத்தான் விறுவிறுப்பாக இந்த வெப்சீரிஸாக இயக்கியுள்ளனர். அதாவது இருபத்தி நான்கு மணி நேரத்தை தவிர மறந்து போன விஷயங்களை கண்டுபிடிக்க முயல்வது போலவும், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள முயல்வது போன்றும் சீரிஸ் புதுவிதமாக இயக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here