மாத வருமானத்தில் அதிகமாக சேமிக்கணுமா?? அப்போ கண்டிப்பா இதை படிங்க.!

0

இன்றைய காலகட்டத்தில் உள்ள  விலைவாசியில்  சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. இந்த காலத்திலும் வறுமை  கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இருக்கின்றனர். இந்தியா  தற்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாகவே  உள்ளது. அதே போல் வேலையில்லா திண்டாட்டமும் இந்தியாவில் பெரிதும் காணப்படுகிறது. இதனால்  குறைந்த வருமானத்தில் சேமிப்பது எப்படி என்று தெரிந்து  கொள்வது அவசியமாகும் .

செலவுகள்

பொதுவாக நாம் அன்றாட செய்யும் செலவுகளை அதன் முறைப்படி 3 வகைகளாக  பிரிக்கலாம். அதாவது Fixed expenses, Variable expenses, discretionary expenses. இதன் மூலம்  தேவையற்ற செலவை குறைத்து சேமிப்பு  அதிகரிப்பதை  தெரிந்து கொள்ளலாம்.  இதன் அடிப்படையில் எப்படி சேமிப்பது என்று பார்ப்போம்.

 Fixed expenses

Fixed expenses என்பது மாத மாதம் மாறாமல் வரும் செலவினை குறிப்பிடுவது. எடுத்துக்காட்டாக வீட்டு வாடகை   மற்றும் மாதத்தவனை ஆகியவற்றை குறிக்கும்.அதில் எந்த மாற்றமும் நம்மால் செய்ய முடியாது. அதனால் தான் Fixed expenses என்று கூறப்படுகிறது.

Variable expenses

Variable expenses என்பது மாத  மாதம் சில செலவுகளில் நம் உபயோகிக்கும் விதத்தில் மாறுபடும். மின்சார கட்டணங்கள் நாம் உபயோகிப்பதில் அடிப்படையில் மாறும் எனவே இதனை Variable expenses என்று அழைக்கிறோம். இதில்  நம்மால் முடிந்த வரை சேமிப்பை  ஏற்படுத்தலாம்.  அதாவது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும்போது கண்டிப்பாக சேமிக்கலாம்.

discretionary expenses

discretionary expenses என்பது பொழுதுபோக்கு செலவாகும். இந்த செலவில் கண்டிப்பாக நம்மால் மாற்றத்தை கொண்டு வர இயலும்.  நாம் அதிகமாக பொழுதுபோக்குகளில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவை தவிர்க்கும் போது சேமிப்பு தானாகவே  அதிகரிக்கிறது. ஏனெனில் கஷ்டமான சூழ்நிலையில் இந்த சேமிப்பு நமக்கு  மிகவும் உதவியாக இருக்கும். எனவே தேவையற்ற ஆடம்பர  தவிர்த்தாலே கண்டிப்பா அதிகளவு பணத்தை சேமிக்கலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here