மகளிர் உரிமை தொகைக்கு ரூ.1,138 கோடி.., ஆனா மது விற்பனை ரூ.633 கோடி.., திமுகவை சாடிய ராமதாஸ்!!

0
மகளிர் உரிமை தொகைக்கு ரூ.1,138 கோடி.., ஆனா மது விற்பனை ரூ.633 கோடி.., திமுகவை சாடிய ராமதாஸ்!!
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன் தினம் கலை கட்டியது. ஆனால் பண்டிகையை விட மது கடைகளில் குடிமகன்களின் கூட்டம் தான் அலைமோதியது. அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.633 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் அதிக போதையால் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் வெளியிட்ட செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை குற்றம் சாட்டி உள்ளார்.
தற்போது 20 உயிர்கள் பலியாகி இருப்பது எந்த வகையிலும் திமுக அரசு நியாயப்படுத்த முடியாது. மேலும் போதையை ஒழிக்காமல் விடியல் பிறக்காது. இத்துடன் மகளிர் உரிமை தொகைக்கு ரூ.1,138 கோடி கொடுத்து விட்டு அதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளில் ரூ.633 கோடி வசூலித்து அதை ஈடு கட்டியதாக கூறியுள்ளார். இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அத்துடன் கஞ்சா நடமாட்டத்தையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here