தீபாவளி பண்டிகை சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட பணிக்கு திரும்பி உள்ளனர். இதை போல, இன்று (நவம்பர் 14) முதல் வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
