ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள் குழுவை இன்று சந்திக்கும் பிரதமர்…!காணொளி வாயிலாக கலந்துரையாடல்!!!

0

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று மாலை கலந்துரையாட உள்ளார். இந்த கலந்துரையாடல் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக தள்ளிவைக்கபட்ட உலகத்தின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான ஒழும்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. மேலும் வருகிற 31ஆம் தேதி முதல் தடகள போட்டிகள் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக பல வீரர்களும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு 120க்கும் அதிகமான இந்திய வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் 11 வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாவர்.

மேலும் இதன்  90 வீரர்கள்  மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய முதல் குழு வருகின்ற 17ஆம் தேதி டோக்கியோ செல்ல உள்ளனர். இந்நிலையில் இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ள இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் இன்று மாலை 5 மணி அளவில் காணொலி வாயிலாக நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கலந்து உரையாட உள்ளார். பிரதமரின் இந்த உரையாடல்,  வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிக்கு ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here